Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை” - உச்ச நீதிமன்றம்!

04:15 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு உண்மை சரிபார்ப்பு குழுவை (Fact Check Unit) செயல்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Tags :
Fact Check UnitSupreme court
Advertisement
Next Article