Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அரசு உத்தரவு!

11:29 AM Feb 17, 2024 IST | Jeni
Advertisement

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.  இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 பிரிவு 3(1) (zx)
பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (ix) மற்றும் பிரிவு 26(1) (2) (i) (ii) & (v)- ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஜனவரி 2024-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல்,  விற்பனை செய்தல்,  திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.  மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது”

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags :
ArtificialChemicalCottonCandyMaSubramanianSweetTamilNaduTNGovt
Advertisement
Next Article