Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை...! ஏன் தெரியுமா?

03:53 PM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

செயற்கை நிறங்களை பயன்படுத்துவதால் கோவாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்தியாவில் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் கோவா மாநிலத்தில் சுற்றுலா சார்ந்த வருவாய் என்பது அதிகம்.  உள்நாட்டு சுற்றுலா பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை பலரும் கோவாவுக்கு வந்து செல்வார்கள். இவர்களுக்கு சாப்பிட தெருவோர உணவுகள் முதல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரதான உணவுகள் கிடைக்கும்.

இந்நிலையில், கோவாவில் உள்ள மபோசா நகரில் கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian) தடை செய்யப்பட்டுள்ளது.  செயற்கையாக சேர்க்கப்படும் நிறமிகள்,  சுகாதாரம் சார்ந்த பிரச்னை காரணமாக கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு உள்ளூர் சுகாதாரத்துறை தடையை விதித்து இருக்கிறது.

சாலையோர உணவகம் முதல் பிரதான உணவகங்கள் வரையில் விற்பனை செய்யப்படும் கோபி மஞ்சூரியனில் (Cauliflower Manchurian) நிறம் மற்றும் சுவைக்காக செயற்கை வர்ணம், சாஸ்,  சோடா உப்பு போன்றவையும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இதனால் பல உடல்நல பிரச்னைகளை சுற்றுலா பயணிகள் எதிர்கொள்வதை தொடர்ந்து, சிலர் தங்களின் புகாரையும் முன்வைத்தனர்.  உணவு பாதுகாப்புத்துறை சார்பில் முன்னதாகவே தடை செய்யப்பட்டுள்ள சாஸ் உபயோகம் செய்ய கூடாது,  நிறமிகளை அதிகம் உபயோகம் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன . ஆனால், அவை யாராலும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் சுகாதாரத்துறை சார்பில் காலிப்ளவர் வறுவலுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement
Next Article