For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அஸ்ஸாமில் பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை - இன்று முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் #HimantaBiswaSarma அறிவிப்பு!

09:36 PM Dec 04, 2024 IST | Web Editor
அஸ்ஸாமில் பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை   இன்று முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர்  himantabiswasarma அறிவிப்பு
Advertisement

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டம் , மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவ்வபோது ஆதரவான கருத்துக்களை ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களுடம் பேசியதாவது..

" அஸ்ஸாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுகிறது. கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்படுவர். அஸ்ஸாமில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கு முன்பே நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்.

தற்போது பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண முற்றிலுமாகத் தடை விதித்துள்ளோம். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement