Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை - கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

12:56 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில்  செல்லக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை
காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டு
மண்டல பூஜைக்காக கோயில் நடை நாளை மாலை திறக்கப்படவுள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அதனை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.

இதையும் படியுங்கள்:“தகைசால் தமிழர்” சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்த நிலையில், பஸ்கள் மற்றும் வேன்களில் வரக்கூடிய பக்தர்களில் பலர் தங்களது வாகனங்களை அலங்கார விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்று வரக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் கடந்த காலங்களில் வந்தன.

அதனை காரணமாக சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்ய கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.  இருந்த போதிலும் தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வரக்கூடாது
என்றும், அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Tags :
againbanneddecorated vehiclesKeralakerala high courtOrderSabarimala Ayyappan Temple
Advertisement
Next Article