நாசாவில் சீனர்களுக்கு தடை - அமெரிக்கா அதிரடி உத்தரவு!
அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே விண்வெளித்துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரு நாடுகளும் மும்பரமாக உள்ளன. அமெரிக்கா “ஆர்ட்டெமிஸ்” (Artemis) திட்டம் மூலம் 2027-ஆம் ஆண்டில் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்க குறி வைத்துள்ளது. சீனாவே 2030-ஆம் ஆண்டுக்குள், தங்களது “டைகோனாட்களை” (Taikonauts) நிலவில் இறக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவின் திட்டங்களில் சீன நாட்டினர் சேருவதை நாசா தடை விதித்துள்ளது. நிலா மற்றும் ஜீபிடர் கோளுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் குறித்த விவரங்கள் சீனாவுக்கு தெரிந்துகூட கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாசாவின் செய்தித் தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸின் கூற்றுப்படி, நாசாவின் பணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாசா இந்த உள் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீன நாட்டினர் நாசாவின் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களாகவோ அல்லது ஆராய்ச்சிக்கு பங்களிக்கும் மாணவர்களாகவோ பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருப்பினும் ஊழியர்களாக இல்லை என்பது குறிப்படத்தக்கது.