பாஜக வேட்பாளரின் பரப்புரைக்கு தடை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
மேற்கு வங்க பாஜக வேட்பாளரும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் நிடைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே. 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என மொத்தம் 889 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகிறார்கள் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாஜக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த 15 ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர்,
இந்த புகாரையடுத்து அபிஜித்திடம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பெண்ணை தரக்குறைவாக பேசியதற்காக ஒருநாள் பிரச்சாரத்தில் ஈடுபட அபிஜீத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.