Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

22 தரமற்ற மருந்துகளுக்கு தடை - மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

10:24 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 22 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

Advertisement

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருத்து மற்றும் மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வின் மூலம் போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும்.

அந்த வகையில், கடந்த மாத்ததில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது.இதைபோல உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் 5 மருந்துகள் போலியானவை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள் : எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா – விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

இதையடுத்து அந்த மருந்து மாத்திரைகளில் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மருந்துகளில் பெரும்பாலானவை குஜராத்,  ஹிமாசலப் பிரதேசம்,  உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags :
banCentral Drug Quality Control BoardINFORMATIONsubstandard drugs
Advertisement
Next Article