Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி - பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

06:59 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை மறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் இரண்டாம் நிலை ஏவுகணைக்கான பரிசோதனை நேற்று (ஜூலை 24) நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“ஒடிஸா மாநிலம் சாண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வைத்து பூமியின் வளிமண்டலத்துக்குள் உள்ள இலக்கை இடைமறித்து அழிக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை, விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த சோதனையில் ஏவுகணை, அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டது.

இந்தப் பரிசோதனையின் மூலம்  5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் உள்நாட்டு திறனை செயல்படுத்திக் காட்டியுள்ளது.

வெற்றிகரமாக நடைபெற்ற இந்த பரிசோதனையை செலுத்திய  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்” என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
Ballistic MissileBallistic Missile Defence SystemDRDO
Advertisement
Next Article