பாலகிருஷ்ணாவின் “அகண்டா 2” பட வெளியீடு ஒத்திவைப்பு...!
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்கு மகராஜ் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதனை தொடர்ந்துபாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனுவின் இயக்கத்தி உருவாகியுள்ள “அகண்டா 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். இது 2021ஆம் ஆண்டு வெளியான அகண்டா திரைப்படத்தில் இரண்டாம பாகமாகும். இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (டிசம்பர் 5) வெளியாக இருந்தநிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தவிர்க்க முடியாத காரணங்களால் அகண்டா 2 திட்டமிட்டபடி வெளியிடப்படாது என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இது எங்களுக்கு ஒரு வேதனையான தருணம், மேலும் படத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகர் மற்றும் திரைப்பட ஆர்வலருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் மனமார்ந்த மன்னிப்பு கேட்டு கொளிகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.