நாளை அறிமுகமாகும் பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்!
பஜாஜ் நினுவனம் நாளை சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கு ஃபிரீட்ம 125 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை நாளை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இதுவரை பெட்ரோல் பைக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் இனி சிஎன்ஜி பைக்குகளையும் பயன்படுத்துவதற்கான பரிணாமத்தை பஜாஜ் வழங்கியுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது, "ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் செய்ய முடியாத விஷயத்தை தற்போது பஜாஜ் நிறுவனம் செய்து வருகிறது. சிஎன்ஜி பைக்கை தயாரித்துள்ளது. இதன் மூலம் மக்கள் குறைவான எரிபொருள் செலவில் வாகனங்களை இயக்க முடியும். அடுத்த காலாண்டில் இது விற்பனைக்கு அறிமுகமாகும்" என்றார்.
இந்நிலையில் இந்த பைக்கிற்கு எந்தப் பெயரை பஜாஜ் பயன்படுத்தும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக ப்ரூஸர் என்ற பெயர் உட்பட பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் டிரேடுமார்க்கிற்காகப் பதிவு செய்திருக்கும் ஏதோவொரு பெயரை இந்த பைக்கிற்கு பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்ட நிலையில், 'ஃப்ரீடம் 125' (Freedom 125) என்ற பெயரை இந்த பைக்கிற்கு பஜாஜ் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தகவல் கசிந்திருக்கிறது.
பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளப் பக்கத்தில் பிற பைக் மாடல்களின் பெயர்களுடன் இந்தப் பெயரும் இடம்பெற்றிருந்தது. எனவே, ஃப்ரீடம் 125 என்ற பெயரையே தங்களுடைய CNG பைக்கிற்கு பஜாஜ் பயன்படுத்தியிருக்கும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.