Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்!

01:52 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Advertisement

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.  கைதைத் தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த சோரன்,  இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.  ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணாப் சவுத்ரி,  முதல் கட்ட தகவலின் படி நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் குற்றவாளி இல்லை.  ஜாமீனில் இருக்கும்போது குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றார்.

இதனைக் கேட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Tags :
BailEnforcement DirectorateHemant SorenJharkhand High Court
Advertisement
Next Article