சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் - ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி
கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு 53 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 31ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டுமென்றும் அவருக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் நிபந்தனையில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு
சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது
ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் இன்று
நீதிபதி சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய
உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனால் சந்திரபாபு நாயுடு 29ஆம் தேதி வரை அரசியல்
நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ள இயலாது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி வாதாடிய சந்திரபாபு நாயுடு
தரப்பு வழக்கறிஞர் சந்திரபாபு நாயுடுவிற்கு உடல்நிலை பாதிப்புகள் உள்ளன. அவருடைய இதய துடிப்பின் அளவு அதிகரித்துள்ளது என்பது உள்ளிட்ட விஷயங்களை
ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வாதாடிய நிலையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.