Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TVK தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்!...

06:31 PM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

தவெக கட்சிக் கொடியில் உள்ள யானை சின்னம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement

நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகப்படுத்தி இருந்தார். அதில் 2 போர் யானைகள் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் வாகை மலரும் இடம் பெற்றிருந்தது.

இதற்கிடையே தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி தொடர்பாக பகுஜன் சமாஜ் புகார் அளித்திருந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு பதில் அளித்து இருந்தது. அதில்"இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு தான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தை பெற முடியும். எனவே ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் கொடி இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தவெக கட்சி தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க கோரி உள்ளார். கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தவெக கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இதனால் தற்போது சட்டபோராட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தயாராகி வருகிறது.

https://twitter.com/BSPTamilnadu/status/1847611310193987697
Advertisement
Next Article