ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி!
பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாயாவதியின் அரசியல் வாரிசுமான ஆகாஷ் ஆனந்தும் சென்னை வந்துள்ளார்.