For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!

கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
07:25 PM Jul 16, 2025 IST | Web Editor
கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்
Advertisement

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். பூதலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள தெப்பகுளத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கால்களை நனைத்து விட்டு சாமி தரிசனம் செய்வதை ஐதீகமாக கருதி வந்தார்கள்.

மேலும் இந்த தெப்பகுளத்தில் தை மாதத்தில் வரும் தேர் திருவிழா காலத்தில் தெப்ப தேர் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த தெப்பகுளத்திற்கு தண்ணீர் வருவதற்கு வேண்டி இந்து சமய அறநிலையத்துறை, மற்றும் பொதுப்பணித் துறையும் இணைந்து அனந்தநார் சானலிருந்து தண்ணீர் புலிவீரன் குளத்திற்கு வந்து தனி கால்வாய் வழியாக கோவில் தெப்பகுளத்தில் நீர் நிரப்பி வந்தார்கள்.

இந்தத் தெப்ப குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற மடைகளும் வைத்துள்ளார்கள் ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர் திருவிழாவிற்கு முன்பு இந்த தெப்பகுளத்தை தூர் வாரி சுத்தம் செய்வதை பக்தர்களும்,அற நிலைய துறையினரும் செய்து வந்தனர். தற்போது பல வருடங்களாக இந்த தெப்பகுளம் தூர் வாரப்படாமல் நெகிழிகளும், குப்பைகளுமாக தனித்தன்மையை இழந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று மீன்களும் செத்து மிதந்து கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேட்டி அளிக்கையில்,

தெப்பகுளம் தூர் வார டெண்டர் விடப்பட்டும் பணிகள் சரியாக நடக்காததால் பல நாட்களாக கழிவுகளின் பிடியில் சிக்கி உள்ள தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது. மேலும் கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதோடு தெப்பக்குளத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் மனவேதனையுடன் செல்கின்றனர்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீரை இந்த தெப்பக்குளத்தில் இருந்து எடுத்து செல்வார்கள். இதனால் விரைந்து இந்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இனியாவது அதிகாரிகள் முன்வந்து தெப்பக்குளத்தை தூர்வாரி அதன் புனிதத் தன்மை கெடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவம் அறிந்து பேரூராட்சி மன்ற தலைவர் ஆலிவர் தாஸ் பேரூராட்சி ஊழியர்களை வைத்து மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் அப்போது அவர் கோவில் தெப்பக்குளம் தூர் வார டெண்டர் விடப்பட்ட நிலையில் அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

எனவே தெப்பக்குளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக வேலை நடைபெற்று வருகிறது இந்நிலையில் தெப்பக்குளத்தின் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என கூறினார். இருப்பினும் தெப்பக்குளத்தில் இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags :
Advertisement