பாபர் மசூதி இடிப்பு தினம் - இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !
நெல்லையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இஸ்லாமியர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியான மேலப்பாளையத்தில் அணைத்து அரசியல் இயக்கங்கள் வணிகர் சங்கங்கள் ஜமாத் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.அதன்படி, வி எஸ் டி சாலை, கொட்டிக்குளம் சாலை, பஜார் திடல், நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் 100க்கும் மேற்பட்ட வாடகை வேன் மற்றும் கார்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது . மேலும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .