For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பி.எட்., சிறப்புக்கல்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எப்போது கடைசி நாள் தெரியுமா?

09:54 AM Jan 04, 2024 IST | Web Editor
பி எட்   சிறப்புக்கல்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எப்போது கடைசி நாள் தெரியுமா
Advertisement

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இ.இரா.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2008ல் இருந்து பி.எட். சிறப்பு கல்வி பட்டப் படிப்பை தொலைநிலை வாயிலாக வழங்கி வருகிறது.  இந்த படிப்பை வழங்கி வரும் 2 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் ஒன்று. இது பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது. இந்தப் படிப்பை முடித்தவர்கள் அரசு பொது மற்றும் சிறப்பு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். இந்தப் படிப்பு யுஜிசி, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்கும் 'அயலான்'...!

அந்த வகையில், 2024ம் ஆண்டு பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்  நுழைவுத் தேர்வின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு ஆகியவற்றை கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.  சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசி நாள்.

இந்த தேர்வுக்கு வருகிற 20ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://tnou.ac.in/prospectus-bed.php என்ற பல்கலைக்கழக இணையதளத்துக்கு சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க கையேடுகளை பார்க்கலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம "

இவ்வாறு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement