குற்றாலத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் - துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.!
குற்றாலத்தில் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கிய நிலையில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் அருவியில் புனித நீராடி மாலை அணிவித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 41 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் காண இருமுடி கட்டி செல்வது வழக்கம்.
அந்த வகையில், மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை
திறக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று ஏராளமான
ஐயப்ப பக்தர்கள் காலையிலே புண்ணிய நதிகள் மற்றும் அருவிகளில் குளித்து துளசி
மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
அந்த வகையில், பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காலை முதலே ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் வருகை தந்து அருவியில் புனித நீராடி குற்றாலம் குற்றாலநாதர் கோவில், தர்மசாஸ்தா கோவில், பிள்ளையார்கோவில் உள்ளிட்ட கோவில்களில் வைத்து துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் வருடம் தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன்
நிலவுவது வழக்கம். அதன்படி மழைக்கால சீசன், மற்றொன்று ஐயப்ப பக்தர்கள் சீசனாகும். மழைக்கால சீசனானது முடிவடைந்து ஐய்யப்ப பக்தர்கள் சீசன் இன்று முதல் தொடங்கியுள்ள சூழலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் மகர விளக்கு பூஜை முடியும் வரை குற்றாலம் அருவிகளுக்கு வருகை தருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.