ஆயுத பூஜை 2025: பூக்களின் விலை கடும் உயர்வு...மல்லிகை கிலோ எவ்வளவு தெரியுமா?
பண்டிகை காலங்களில் பூக்களின் விலை வழக்கமாக உயந்து காணப்படும். சாதாரண நாட்களை விட பண்டிகை, முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை விண்ணைத் தொடும். இதனால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பண்டிகை காலங்களில் நல்ல லாபம் இருக்கும். குறிப்பாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நாட்களில் பூக்கள் விலை அனைத்து இடங்களிலும் கடும் உயர்வை கண்டிருக்கும். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி,
மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 900,
பிச்சிப் பூ ஒரு கிலோ ரூ.800,
சம்பங்கி பூ ஒரு கிலோ ரூ.300,
கேந்தி பூ ஒரு கிலோ ரூ.60-70,
செவ்வந்திப் பூ ஒரு கிலோ ரூ.230,
ரோஸ் பூ ஒரு கிலோ ரூ.330 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கேந்தி பூ ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது 60க்கும் 70 ரூபாய்க்கும் விற்பனையாவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.