ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட அயோத்தி!
ராமர் சிலை கோயிலில் நடைபெற உள்ள பிரதிஷ்டை விழாவையொட்டி சரயு நதிக்கரை மற்றும் அயோத்தியா மாநகரில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது
இதையும் படியுங்கள் : “ஆளுநர்கள் மலிவான, தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி இக்கோயிலை சுற்றி உள்ள பகுதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சரயு நதிக்கரை மற்றும் அயோத்தியா மாநகரில் உள்ள பகுதிகளில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.