For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தி ராமர் கோயில் நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

09:53 AM Feb 16, 2024 IST | Web Editor
அயோத்தி ராமர் கோயில் நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
Advertisement

அயோத்தி ராமர் கோயில் கருப்பொருளின் அடிப்படையிலான நாணயம் உள்பட 3 நினைவு நாணயங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Advertisement

இந்திய அரசுக்குச் சொந்தமான 'இந்திய பணம் அச்சிடும் கழகத்தின் (எஸ்பிஎம்சிஐஎல்) 19.வது தொடக்க விழாவையொட்டி 3 நினைவு நாணயங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்.15) வெளியிட்டார்.  இந்த நாணயங்கள், அயோத்தி ராமர் கோயில்,  இந்தியாவின் அழிந்துவரும் விலங்கான பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் புத்தரின் ஞானம் ஆகியவற்றைக் கருப்பொருளாக கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : 2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி – பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!

இதனைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,

"சர்வதேச நிதியம் உலக வங்கி இருதரப்பு சந்திப்புகளின் போது இந்தியா பரிசளித்த பஞ்சதந்திர கருப்பொருளில் நினைவு முத்திரைகள் மற்றும் நாணயங்களை கொண்டு வருவதற்கு எஸ்பிஎம்சிஐஎல்-க்கு பாராட்டுகள்.  எஸ்பிஎம்சிஐஎல் கொண்டு வரும் நினைவு முத்திரைகள் அல்லது நாணயங்களின் கருப்பொருள்கள்,  உலகெங்கிலும் நிகழும் முன்னேற்றங்கள்,  சுற்றுச்சூழல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறித்த கவலைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன"  இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தள்ளார்.

Tags :
Advertisement