Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏவிஎம் சரவணன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
11:10 AM Dec 04, 2025 IST | Web Editor
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

Advertisement

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக அவர் தயாரித்த பல்வேறு வெற்றித் திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் வனிகத்தையும் மதிப்பையும் உலகளவில் உயர்த்தியவை என்றால் அது மிகையாகாது. தமிழ்த் திரைத்துறையினரின் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த ஏ.வி.எம். சரவணன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKAVM Saravananavmproductionsedappadi palaniswamipasses away
Advertisement
Next Article