அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்- பணிகள் மும்முரம்!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். அந்த வகையில், ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.
மாடுகள், மற்றும் மாடுபிடி வீரார்களுக்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்றது. போட்டியில், காளைகள் எண்ணிக்கை அவனியாபுரத்தில் 2,026 , பாலமேட்டில் 4,820, அலங்காநல்லுார் 5,786 என பங்கேற்க பதிவாகியுள்ளது. அதைதொடர்ந்து, மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அவனியாபுரம் 1,735, பாலமேடு 1,914, மற்றும் அலங்காநல்லுார் 1,698ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
-