ஆவணி மாத பூஜை - நவகிரக கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை!
ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நவகிரக கோயில்களில் பிரதானமாகவும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை
ஆதீனத்திற்கு சொந்தமானதாக சூரியனார் கோயில் அருள்மிகு உஷா தேவி
பிரதியுக்க்ஷா தேவி சமேத சிவசூரியப்பெருமான் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு உலக நலன் வேண்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கோயிலில் உள்ள மகா அபிஷேக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள
பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகமும்
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்களுடன்
எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : #BoxOffice | ‘தங்கலான்’, ‘டிமான்டி காலனி 2’ படங்களை விட வசூலில் பின் தங்கிய ‘ரகு தாத்தா’!
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவமூர்த்திகள் எழுந்தருள மகா தீபாராதனையும் நடந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.