பார்டர் கவாஸ்கர் தொடர் - தீவிர பயிற்சியில் இந்திய அணி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படியுங்கள் : தேர்வுகளில் குளறுபடி நடப்பதைக் கண்டித்து இளைஞர்கள் 4வது நாளாக போராட்டம்! – உத்திரபிரதேசத்தில் பரபரப்பு
இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், தற்போது இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர் . பெர்த் நகரில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.