For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#T20W | முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா -தென் ஆப்ரிக்கா இன்று மோதல்!

06:41 AM Oct 17, 2024 IST | Web Editor
 t20w   முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா  தென் ஆப்ரிக்கா இன்று மோதல்
Advertisement

மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

Advertisement

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று (அக்.17ம் தேதி) தொடங்குகின்றன. இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் சார்ஜாவில் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

Tags :
Advertisement