முதல் ஒருநாள் போட்டி : இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பின் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்குவதால் இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டானது
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனிடையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால்,போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 26 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்தது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 50 ரன்களும் ஜோஷ் பிலிப்பெ 37 ரன்களும் அடித்தனர். இதனால், தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.