For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸி. அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி - ரிங்குசிங்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றி.!

07:08 AM Nov 24, 2023 IST | Web Editor
ஆஸி  அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி   ரிங்குசிங்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றி
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20  போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் உள்ள கிரிக்கெட் தொடருக்கு சூர்ய குமார் யாதவ் தலைமையில் டி20 அணியை அறிவித்தது இந்திய அணி.  இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸை ஸ்டீவ் ஸ்மித் - கேப்டன் மேத்யூ ஷார்ட் கூட்டணி  3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூ ஆட்டமிழந்தார்.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய  ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக சதம் அடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.

இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 2-ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.  8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் அடித்திருந்த ஸ்மித் 16-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 208 ரன்களை குவித்தது.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சார்பில்   யஷஸ்வி ஜெய்ஸ்வால் ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடங்கியது. இதில் ஒரு பந்தை கூட சந்திக்காத ருதுராஜ், துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த இஷான் கிஷண் நிதானமாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிய  4-ஆவது வீரராக களம் புகுந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இஷான் - சூர்யகுமார் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. இதில் இஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். தன்வீர் சங்கா வீசிய 13-ஆவது ஓவரில் மேத்யூ ஷார்ட்டிடம் அவர் கேட்ச் கொடுத்தார்.

சூர்யகுமார் தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவிக்க, 5-ஆவது வீரராக வந்த திலக் வர்மா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அவரும் தன்வீர் வீசிய 15-ஆவது ஓவரில் விளாசிய பந்து ஸ்டாய்னிஸிடம் தஞ்சமடைந்தது. 6-ஆவது வீரராக ரிங்கு சிங் பேட் செய்ய வர, சூர்யகுமார் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப் வீசிய 18-ஆவது ஓவரில் ஆரோன் ஹார்டியிடம் அவர் கேட்ச் கொடுத்தார்.

பின்னர் ஆட வந்த அக்ஸர் படேல் 2 ரன்களுக்கு, ஷான் அப்பாட் வீசிய கடைசி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்  ரன் அவுட் ஆகினர். கடைசி பந்தில் 1 ரன் தேவையிருக்க, அதை ரிங்கு சிங் சிக்ஸராக விளாசினாலும், அது 'நோ பால்' (1 ரன்) ஆனது.  இதனைத் தொடர்ந்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

Tags :
Advertisement