For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ODI போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
03:05 PM Mar 05, 2025 IST | Web Editor
ஆஸி  கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் odi போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (வயது 35) தனது அணிக்காக  170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,800 ரன்களை குவித்துள்ளார். இதில் அவர் 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். மேலும் லெக்ஸ்பின்னராக இவர் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 கேட்ச்களையும் பிடித்துள்ளார். 2015 மற்றும் 2023-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தவர். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் நாக்-அவுட் போட்டிகளில் 418 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisement

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய  ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நேற்று(மார்ச்.04) இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித்  அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  ஆஸ்தியேலிய அணி அறிக்கை வெளியிட்டது. அதில் அவர், “ சிறந்த பயணமாக இருந்தது.  ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்திருக்கேன். இதில் மறக்க முடியாத அற்புத தருணங்கள் உள்ளது. இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளேன்.

எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடருக்கு அணி சிறந்த முறையில் தயாராக இது சரியான முடிவாக இருக்கும் என கருதுகிறேன். அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பல்வேறு அணிகள் உடனான டெஸ்ட் தொடர்களை எதிர்பார்த்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement