“வா வா என் தேவதையை”... 2வது பெண் குழந்தைக்கு தந்தையானார் பேட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸ் - பெக்கி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரது மனைவி பெக்கி கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தங்கள் இரண்டாவது பெண் குழுந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளனர். “நாங்கள் இப்போது உணரும் மகிழ்ச்சியையும், அன்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என பேட் கம்மின்ஸ் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதல் குழந்தை பிறந்தபோது அவரால் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை என்பதால், இந்தமுறை தவறவிடக்கூடாது எனவும், குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக பேட் கம்மின்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளின் கேப்டன் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டு வருகிறார்.
View this post on Instagram