AUS vs WI | ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்றுடன் (பிப்.06) நிறைவடைந்தது. ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று (பிப்.6) மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 86 ரன்களில் ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரரான அலிக் அதனாஸ் அதிகப்பட்சமாக 32 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆடம் ஸாம்பா மற்றும் லான்ஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், சீன் அப்பாட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்: “மத்திய அரசைக் கண்டித்து நாளை டெல்லியில் மாபெரும் போராட்டம்” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!
87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஜேக் ஃப்ரேசர் அதிகப்பட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜோஷ் இங்லிஷ் 35 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தி நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவியர் பார்ட்லெட் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.