AUS vs IND | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்... டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அணியும்ம், அடிலெய்டில் நடைபெற்ற 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இதன்மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று (டிச.14) தொடங்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கிய இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் , ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
ஆஸ்திரேலியா :
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுசேன் , ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்