Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டமேதை அம்பேத்கரின் உண்மையான குரல் என வைரலாகும் ஆடியோ - Fact Check

12:31 PM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘The Quint

Advertisement

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் உண்மையான குரல் என சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

1931 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் 
சட்டமேதை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் உரை இடம்பெற்றுள்ளதாகக் கூறும் ஆடியோ கிளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ பகிர்ந்த சமூக வலைதளப் பயனர்கள் சிலர் அம்பேத்கரின் குரல் உள்ள பதிவுகள் கிடைப்பது அரிதான ஒன்று. ஆனால் இது உண்மையான குரல் வடிவ உரை கேட்டுப் பாருங்கள் என அப்பதிவில் இடம்பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு குறித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த குரல் மலையாள நடிகர் மம்முட்டிக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 2000 ஆம் ஆண்டு பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டாக்டர் அம்பேத்கராக நடித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த குரல் பதிவுகள் உண்மையான அம்பேத்கருடையது என பரவுகிறது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலாகும் குரல் பதிவு குறித்து கூகுளில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடினோம், இது ஆடியோ எடுக்கப்பட்ட அசல் வீடியோவுக்கு எங்களை அழைத்துச் சென்றது. இந்த ஆடியோ 2000 ஆம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று படமான அம்பேத்கர் படத்தில் அம்பேத்கராக நடித்த மலையாள நடிகர் மம்முட்டியின் குரலைக் கொண்டுள்ளது.

திரைப்படத்தின் 1:37:20 நேரத்தில் டாக்டர் அம்பேத்கரின் கதாபாத்திரம் தனது பேச்சைத் தொடங்குவது வைரலான வீடியோவில் கேட்கப்படுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சின் இணையதளத்தில் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் பகுதி II” என்ற தொகுப்பில் வைரலான ஆடியோவில் கேட்ட முழு உரையையும் நாங்கள் கண்டோம் .

1930 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டின் ஐந்தாவது கூட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரத்தின் தேவை பற்றி பேசினார். முழு உரையையும் பக்கங்கள் 529-535 இல் காணலாம் .

முடிவு:

அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்  இடம்பெற்ற ஆடியோ கிளிப் ஒன்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் அசல் குரல் என்று பொய்யாக வைரலாகி வருகிறது.

Note : This story was originally published by The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AmbedkarBR AmbedkarViral Audio
Advertisement
Next Article