For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆடி கார் விபத்து - இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

03:52 PM Jul 04, 2024 IST | Web Editor
ஆடி கார் விபத்து   இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
Advertisement

வாகன விபத்தில் இழப்பீடு தொகையை குறைத்து கொடுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாவட்ட குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

திருநெல்வேலி கேடிசி நகர் வெல்கம் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் தனது ஆடி காரில் நெல்லையிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்து உள்ளார். பயணம் செய்யும் வழியில் விபத்து ஏற்பட்டதால், வாகன காப்பீடு செய்த தனியார் காப்பீடு நிறுவனத்திடம், காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

காப்பீடு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்பேரில் மதுரையில் உள்ள தனியார் ஆடி கார் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்ய வாகனத்தை நிறுத்தி உள்ளார். வாகனத்தை ஆய்வு செய்த தனியார் சர்வீஸ் நிறுவனம் வாகனத்தில் பழுது நீக்கம் செய்ய உத்தேச மதிப்பீடு கொடுத்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனமானது சர்வீஸ் செய்வதற்கு அனுமதி வழங்கியதால், சர்வீஸ் நிறுவனமானது வானகத்தின் பழுது நீக்கி சர்வீஸ் செய்து கொடுத்துள்ளது.

வாகன விபத்தின்போது ஏற்பட்ட வலது பக்க ஆலாய் வீல் சேதத்தை சர்வீஸ் நிறுவனமானது உத்தேச மதிப்பீட்டில் குறிப்பிட தவறியதால் மேலும் ரூ.70,000 செலுத்துமாறு தெரிவித்துள்ளது. உடனே செந்தில்குமார் காப்பீடு நிறுவனத்திற்கு மேலும் ரூபாய் ரூ.70,000 வழங்க வேண்டும் என கேட்டு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார். காப்பீடு நிறுவனம் வழங்க மறுத்து ரூ. 30,000 மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

பின்னர் சர்வீஸ் நிறுவனத்திற்கு ரூ.45,000 செந்தில் குமார் தனது சொந்த பணத்தை கொடுத்து ஆடி காரில் உள்ள பழுதை நீக்கி பெற்றுள்ளார். காப்பீடு நிறுவனம் தொகை வழங்க மறுத்ததால் வாகனத்தில் பழுதுநீக்கம் செய்ய காலதாமதம் ஏற்ப்பட்டுள்ளது.

செந்தில்குமார் சொந்த தேவைக்கு வாடகை வாகனத்தை பயன்படுத்தியதால் ரூ. 10,000 இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட செந்தில்குமார் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர்,  மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 20,000மும், சர்வீஸ் நிறுவனத்திற்கு செந்தில்குமார் செலுத்திய தொகை ரூ. 45,000மும், அதற்கு 6.5% வட்டியும், வாகனத்தினை பழுது நீக்கம் செய்ய ஏற்பட்ட காலதாமதத்தால் வேறு வாகனம் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடுக்கு ரூ. 10,000மும், வழக்குச் செலவு ரூ. 5000 ஆயிரம் என மொத்தம் ரூ. 80,000 ஒரு மாத காலத்திற்குள் தனியார் காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

Tags :
Advertisement