Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்...!

05:20 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், அங்குள்ள 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ரயில்வே சுரங்க பாலங்கள் மழைநீர் தேங்கி உள்ளது. கோவில்பட்டியில் உள்ள ‌இளையரசனேந்தல் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் மழை பெய்து உள்ளதால் கோவில்பட்டி நகரமே வெள்ளக்கடாக காட்சி அளிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை அடுத்த ஆதிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், அங்குள்ள 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு, தண்ணீர் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி முழுவதும் முற்றிலும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில், தோழப்பன்பண்ணை, பொய் சொல்லா மெய்யப்பன் சாஸ்தா கோயில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களை தொடர்பு கொள்ள: 9080602954, 9025057469 

Tags :
பரிதவிக்கும் தென்மாவட்டங்கள்Heavy rainfallheavyrainsKanyakumari RainsNellaiNews7Tamilnews7TamilUpdatesrainfallTamilnadu RainsTenkasi RainsThoothukudi RainsTirunelveli Rains
Advertisement
Next Article