பயணிகள் கவனத்திற்கு… புத்தாண்டையொட்டி புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முடிந்து புதிதாக பிறக்கும் 2025 ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகி வருகின்றன. இந்தியா நேரப்படி இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்குகிறது. புது வருட முதல் நாளில் வழிபாட்டு தளங்கள் செல்வது, கேக் வெட்டுவது என தங்களுக்கு விருப்பமான வழிகளில் புத்தாண்டை வரவேற்பார்கள்.
இதையும் படியுங்கள் : சென்னையில் 4வது மலர் கண்காட்சி – நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin!
பெரும்பாலும் கடற்கரைகளில் மக்கள் மொத்தமாக கூடி புத்தாண்டை வரவேற்பார்கள், இதனால் நள்ளிரவில் கடற்கரைகள் விழாக்கோலங்களை கொண்டிருக்கும்.இந்த நிலையில், நாளை பொது விடுமுறை தினம் என்பதால் சென்னையில் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (ஜன.1), சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயங்கப்பட உள்ளது. எனவே பயணிகள் இதனை கருத்தில்கொண்டு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.