பயணிகள் கவனத்திற்கு… ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. கூட்ட நெரிசல் தவிர்ப்பதற்காகவும், வேகமான பயணத்திற்காகவும் பெரும்பாலானோர் மின்சார ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். பள்ளி, கல்லூர் மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
பண்டிகை அல்லது அரசு விடுமுறை தினங்களில் இந்த ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், வரும் மார்ச் 31ம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அன்றைய தினம் அரசு விடுமுறையாகும். இதன் காரணமாக, ரம்ஜான் பண்டிகை அன்று (திங்கட்கிழமை) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது,
"ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 31.03.2025 (திங்கட்கிழமை) அன்று விடுமுறை தினமாக இருப்பதால், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் , சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி / சுள்ளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்"
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.