For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் ரயில் நிலைய மோம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்!

09:38 PM Jul 15, 2024 IST | Web Editor
பயணிகள் கவனத்திற்கு    தாம்பரம் ரயில் நிலைய மோம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

Advertisement

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூலை 21 அன்று மாலை 3 மணிக்கு பிகானிரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (22632),  சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும்.

ஜூலை 24, 31 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயிலும் (22535), ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கண்ட்டோன்மெண்ட் ஷிரத்தா சேது விரைவு ரயிலும் (22613) சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும்.

சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.  ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.  அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.

ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (20684) விழுப்புரம் வரை இயக்கப்படும்.  அதேபோல், ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாமரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (20683) விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். தாம்பரம் - ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை இயக்கப்படும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement