For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கவனம் ஈர்க்கும் நடிகர் மம்மூட்டியின் 'பிரம்மயுகம்' திரைப்பட டிரைலர்!

10:36 PM Feb 10, 2024 IST | Web Editor
கவனம் ஈர்க்கும் நடிகர் மம்மூட்டியின்  பிரம்மயுகம்  திரைப்பட டிரைலர்
Advertisement

நடிகர் மம்மூட்டியின் 'பிரம்மயுகம்' திரைப்பட டிரைலர் மிரட்டலாய் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. திகில் வசனங்கள், கருப்பு வெள்ளைக் காட்சிகள், மம்மூட்டியின் சிரிப்பு என இந்த டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

பிரம்மயுகம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் கருப்பு வெள்ளை வடிவத்தில் (பிளாக் அண்ட் ஒயிட்) வருகிற பிப்.15 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement