புரி ஜெகன்நாதர் கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! - ஆடைக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி கூறியதாவது:
"2024, ஜனவரி-1 முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரைக்கால் சட்டைகள், டிராயர்கள், கிழிந்த வடிவிலான ஜீன்ஸ், அரைக்கால் பாவாடைகள், ஸ்லீவ்லெஸ் போன்ற உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது.
கண்ணியமான உடை அணிந்து பக்தர்கள் கோயில் வளாகத்துக்குள் நுழைய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோயிலுக்குள் வரும் பக்தர்கள் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகள், போதைப்பொருட்கள் போன்றவற்றை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கடுமையான பனிப்பொழிவு - 26 ரயில்கள் தாமதம்!...
கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.