"பானிபூரி பிரியர்களின் கவனத்திற்கு..." - கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
01:55 PM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement
பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளதாக கர்நாடகாவில் மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
அண்மை காலமாக மக்கள் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள் பலவற்றில் தீங்கு விளைவிக்கும் செயற்கை ரசாயனங்கள் இருப்பது தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் நிறமிகளில் உள்ள ரசாயனம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் அது தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் தர சோதனை மேற்கொண்டனர். கர்நாடகா முழுவதும் 260 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 41 மாதிரிகள் புற்றுநோய் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும், 18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பானிபூரியே தொடர்ந்து, அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஷவர்மாவிலும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கர்நாடகா முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.