Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!

03:44 PM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.  சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்க,  ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்.  இந்த நிலையில், ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகள் என 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.  கிருஷ்ண ராஜூ கடந்த மாதமே தனது புகாரை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்ததாகவும், சட்ட ரீதியாக ஆலோசனைப் பெறப்பட்டு, தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண ராஜூ அந்த புகாரில், கடந்த 2011ம் ஆண்டு, கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த நிலையில், தன் மீது பொய் வழக்குப் போடப்பட்டு, தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது துன்புறுத்தப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags :
Andhra PradeshcaseJagan Mohan ReddyPoliceRaghu Rama Krishna RajuTelugu Desam PartyYSRCP
Advertisement
Next Article