Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் தாக்குதல் முயற்சி! - இந்தியா கண்டனம்!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி செய்ததையடுத்து பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
06:57 PM Mar 06, 2025 IST | Web Editor
Advertisement

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். முதற்கட்டமாக கடந்த கடந்த மார்ச் 4ஆம் தேதி பிரதமர் பிரதமா் கியா் ஸ்டாா்மரை சந்தித்தாா். பின்பு ‘செவனிங் ஹவுஸ்’ இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

Advertisement

‘செவனிங் ஹவுஸ்’ இல்லம் வெளியே அங்கு ஒன்றுதிரண்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்பு ஜெய்சங்கர் வெளியே வந்தபோது, பாதுகாப்பு காவலர்களை மீறிகாலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் அமைச்சரை தாக்க முயற்சித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்த நிலையில், தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை அவர் கிழித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. இருப்பினும், காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யாமல் பிரிட்டன் காவலர்கள் எச்சரிக்கையுடன் விடுவித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அமைச்சர் ஜெய்சங்கருக்கு நடந்த இந்த பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பு அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தது.  ஏற்கெனவே அங்கு இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
BritonChevening HouseJaishankarunited kingdom
Advertisement
Next Article