மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து மருத்துவமனையில் தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.!
மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து இப்னு சினா மருத்துவமனையில் தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய காணொலிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மருத்துவர் மற்றும் செவிலியர் போன்று வேடமணிந்து மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை சந்தித்து வருகின்றன.