நாடாளுமன்ற தாக்குதல் | வெளியான பரபரப்பு வீடியோ!
நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர்.
அவர்கள் கண்ணீர் புகை குப்பிகளை மக்களவையில் வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே விசாரணையை தொடங்கினர். விசாரணையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை, மக்களவைக்குள் புகுந்த இருவர் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை மக்களவை உறுப்பினர் தானிஷ் அலி தெரிவித்தார்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பார்வையாளர் மாடத்திலிருந்து 2 பேர் திடீரென்று மக்களவை அரங்குக்குள் குதித்தனர். இவர்கள் தவறி விழுந்ததாக முதலில் எம்பிக்கள் நினைத்த நிலையில் அவர்கள் வேகமாக எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் ஏறி முன்னோக்கி ஓடினர்.
அதோடு கலர் பாம் வீசப்பட்டது. இதனால் லோக்சபாவில் மஞ்சள் நிற புகை சூழ்ந்தது. இதனால் பயந்துபோன எம்பிக்கள் அங்கிருந்து ஓடினர். இருப்பினும் சில எம்பிக்கள் துணிந்து அந்த நபர்களை பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This is real🥵
Two people jumped from the visitor gallery to Loksabha. This is huge security breach in Parliament.#LokSabha "संसद भवन"#ParliamentAttack
— Saurabh Singh (@100rabhsingh781) December 13, 2023
She is feeling a bit anxious about job prospects at the age of 35 as a student, but hey, if all else fails, JNU seems like a promising avenue for her. #ParliamentAttack pic.twitter.com/lnOmT4tqx8
— Shubham Sakhuja (@ishubhamsakhuja) December 13, 2023