தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் - குஜராத் பல்கலைகழகத்தில் பதற்றம்!
குஜராத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்ட கொண்டிருந்த போது மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 300 மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கிதான் கல்வி கற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து விடுதி வளாகத்திற்குள் நுழைந்த ஒரு குழுவினர் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டதை கண்டு தொழக்கூடாது என மிரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி தாக்குதலில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் இலங்கை மற்றும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.