For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவசாயிகளின் மீதான தாக்குதல் தேவையே இல்லாத ஒன்று -காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

08:09 PM Feb 13, 2024 IST | Web Editor
விவசாயிகளின் மீதான தாக்குதல் தேவையே இல்லாத ஒன்று  காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம்
Advertisement

விவசாயிகளின் மீதான தாக்குதல் தேவையே இல்லாத ஒன்று,  அவர்களின் கோரிக்கைகளை வாங்கி மத்திய அரசு பரிசீலித்திருக்க் வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் செய்தியாளர்கள் சந்தித்தபோது பேசியதாவது:-

EVM மிஷினில் எனக்கு நம்பிக்கை உண்டு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VV பேட் அமைத்து ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்தால் பலரது சந்தேகங்கள் தீரும்.  பா.ஜ.க அரசு பாசிச அரசு. அவர்களை எதிர்ப்பவர்களை நசுக்குவதே அவர்களது வேலையாகவுள்ளது. விவசாயிகளின் மீதான தாக்குதல் தேவையே இல்லாத ஒன்று. அவர்களின் கோரிகை மனுவை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுப்பதே மக்கள் பிரதிநிதிகளின் கடமை.

ஆனால், அதனை ஒடுக்குவது என்ற சர்வாதிகாரப் போக்கை பாஜக கடைபிடிக்கிறது. தமிழ்நாடு  ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை சட்ட சபையில் காட்டக்கூடாது. மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அதனை நாங்கள் பிரதிபலிக்கிறோம். மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். தமிழ்நாடு  அரசு ஊழியர்களின் பென்சன் கோரிக்கையை தமிழ்நாடு  அரசு நிதி நிலைமைக்கு ஏற்ப தான் அமல்படுத்த முடியும், என்றார்.

Advertisement