ATM களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம் இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில், பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகள் பெற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன.
எனவே, மக்களின் இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
"மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
அந்த வகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று கூறிய நிலையில் ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அறிவுறுத்தி உள்ளது.