For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கும் அட்லீ? வெளியான தகவல்!

12:49 PM Aug 04, 2024 IST | Web Editor
தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கும் அட்லீ  வெளியான தகவல்
Advertisement

இயக்குநர் அட்லீ பாலிவுட்டை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் வசூலில் சாதனை படைத்தது.  இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அட்லீ மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், அட்லீ பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் அட்லீ தனது குழுவினருடன் கதையை உருவாக்கி வருவதாகவும், இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement